வாக்களித்த பொதுமக்களுக்கு தாம்பூலம் கொடுத்து மரியாதை

வாக்களித்த பொதுமக்களுக்கு  தாம்பூலம் கொடுத்து மரியாதை
X

புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி ஊராட்சியில் வாக்களித்துவிட்டு வந்த பெண்களுக்கு வெத்தலை பாக்கு பூ கொடுத்து வரவேற்ற ஊராட்சி மன்ற நிர்வாகம்

வாக்கு எண்ணிக்கை 12.10.2021 அன்று காலை 8. மணிக்கு தொடங்கி, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன

வாக்களித்த பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தாம்பூலம் கொடுத்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழகத்தில் 9 மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 30.06.2021 வரை காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல்கள் இன்று நடைபெறுகிறது.

இதில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு எண்.9, திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு எண்.5, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கீழப்பனையூர், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாங்காடு, பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் அரசமலை, கீழத்தானியம், மறவாமதுரை ஆகிய கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும் 12 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 41 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுக்கள் அனைத்தும் 23.09.2021 அன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தகுதியுள்ள வேட்பாளர்கள் பட்டியல் 25.09.2021 -இல் வெளியிடப்பட்டது. வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்ப பெறும் நாளான 25.09.2021 அன்று தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றதால் மாவட்டத்திலுள்ள 33 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், 1 கிராம ஊராட்சி மன்றத்தலைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

எஞ்சியுள்ள, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நல்லம்பாள்சமுத்திரம் ஊராட்சி வார்டு எண்.2 மற்றும் திருவாக்குடி ஊராட்சி வார்டு எண்.5, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி ஊராட்சி வார்டு எண்.4, திருமயம் ஊராட்சி ஒன்றியம், நெய்வாசல் ஊராட்சி வார்டு எண்.9, பி.அழகாபுரி ஊராட்சி வார்டு எண்.4, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், குலமங்களம் தெற்கு ஊராட்சி வார்டு எண்.9, வேங்கிடகுளம் ஊராட்சி வார்டு எண்.7 மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சி வார்டு எண்.7 என மொத்தம் 8 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மறவாமதுரை, அரசமலை கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழப்பனையூர் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாங்காடு ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கும், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 5-வது ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் பதவிக்கும், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9-வது மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு நடைபெறும் அரசு பள்ளியில் மையங்களில் காவல்துறை பாதுகாப்பு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையை உள்ளிட்டவைகளை பின்பற்றி வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக்குழு 9-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, பூங்குடி ஊராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பூங்குடி ஊராட்சியில் ஆர்வத்துடன் வாக்களித்துவிட்டு வெளியே வரும் பொதுமக்களுக்கு பூங்குடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் வெற்றிலை பாக்கு, பூ, உள்ளிட்டவைகளை வழங்கி ஊராட்சி நிர்வாகம் மரியாதை செய்தனர். ஜனநாயக கடமை ஆற்றி வரும் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் வெற்றிலை பாக்கு கொடுத்து மரியாதை செய்த நிகழ்வு பொது மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

வாக்குப்பதிவு( 09.10.2021 ) இன்று காலை 7 முதல் மாலை 6. மணி வரை நடைபெறுகிறது. கொரோனா தொற்றால் திக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளான இன்று மாலை 5. மணி முதல் 6. மணிவரை வாக்களித்திட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 12.10.2021 அன்று காலை 8. மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் 16.10.2021 முன்பாக முடிவடைகிறது.

Tags

Next Story