கிணற்றில் தவறி விழுந்து போராடிய மயில் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்து போராடிய  மயில் உயிருடன் மீட்பு
X

கந்தர்வகோட்டை அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த தேசிய பறவை மயிலை உயிரை பணையம் வைத்து மீட்டுக் கொண்டுவரும் தீயணைப்புத்துறையினர்

கிணற்றுக்குள் தவறி விழுந்த மயில் தத்தளித்து கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்

கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய மயிலை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில் பெரியையா என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தேசியபறவையான மயில் ஒன்று தவறி விழுந்துள்ளது. தவறி விழுந்த மயில் கிணற்றிலிருந்து மீண்டு வெளியே வரமுடியாமல் தத்தளித்து கொண்டிருந்ததாம். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வீரர் ஒருவரை கிணற்றில் இறங்கச்செய்து, மயிலை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.இதன் பின்பு அந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது. கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டதை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

Tags

Next Story
ai solutions for small business