கந்தர்வகோட்டை அருகே மலைத் தேனீக்கள் கொட்டி உயிருக்கு போராடியவர் மீட்பு

கந்தர்வகோட்டை அருகே மலைத் தேனீக்கள் கொட்டி உயிருக்கு போராடியவர் மீட்பு
X

கந்தர்வகோட்டை அருகே தேனீக்கள் கொட்டி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வரை சாதுரியமாக மீட்டுக் கொண்டுவரும் தீயணைப்பு வீரர்கள்.

ஆலமரத்தில் தேன் எடுக்க சென்றபோது அங்கு மலைத் தேனீக்கள் அவரை கொட்டியதால் மயக்கமுற்று ஆலமரக் கிளையிலையே சுருண்டு தொங்கினாராம்.

புதுக்கோட்டை மாவட்டம் ,கந்தர்வகோட்டை தாலுகா, கொல்லம்பட்டி முத்து ( 55 ) .இவர் ஊரில் உள்ள ஒரு பெரிய ஆலமரத்தில் தேன் எடுக்க சென்றபோது அங்கு மலைத் தேனீக்கள் அவரை கொட்டியதால் மயக்கமுற்று ஆலமரக் கிளையிலையே சுருண்டு தொங்கினாராம்.

இந்த சம்பவத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.இதனை அடுத்து கந்தர்வக்கோட்டை தீயணைப்பு அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில்தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரக்கிளையில் மயக்கமுற்று தொங்கிக்கொண்டிருந்த முத்துவை மீட்டு கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மரத்தில் தேன் எடுக்கச் சென்ற முதியவரை தேனீக்கள் கொட்டியதால் உயிருக்கு போராடி தொங்கிக் கொண்டிருந்தவரை ,சாதுரியமாக மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!