ரயில்வே கேட் கீப்பர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை

ரயில்வே கேட் கீப்பர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை
X

கீரனூர் அருகே கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் சிதறிக் கிடக்கும் பொருட்கள்.

ரயில்வே கேட் கீப்பர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை 40 ஆயிரம் மதிப்புடைய வெள்ளி பொருட்கள் கொள்ளை.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் ரயில்வேயில் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது சொந்த ஊரான ஏதினிப்பட்டி பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்கு நேற்று தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் மதிப்புடைய வெள்ளி நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று வீடு திரும்பிய பாலசுப்ரமணியன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.‌

இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்க்கும் பொழுது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போய் இருப்பது தெரியவந்தது இதனையடுத்து பாலசுப்பிரமணியன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கீரனூர் காவல்துறையினர், தடவியல் நிபுணர்கள் வரவழைத்து அங்கு பதிவான கைரேகைகளை கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.



Tags

Next Story
நம்பியூர் குமுதா பள்ளி மாணவி, தேசிய உறைவாள் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்றார்!