புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள் சத்திரத்தில் நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்ல்

புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள் சத்திரத்தில்  நிவாரண பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்ல்
X

புதுக்கோட்டை மாவட்டம் ரங்கம்மாள் சத்திரத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள் சத்திரத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் நிவாரண உதவிகளை வழங்கினார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய முன் வருகின்றன. அதன்படி இன்று புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் 160 நரிக்குறவர்கள் எனப்படும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு ஊரக மேம்பாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் 16 கிலோ எடையுள்ள அரிசி,கேப்பை மாவு மற்றும் காய்கறிகள் அடங்கிய ரூபாய் 500 மதிப்புள்ள பொருள்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் பொது மக்களுக்கு வழங்கினார் இந்த நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உடனிருந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!