நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு வடக்கு மாவட்ட திமுக நிதியுதவி

நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு  வடக்கு மாவட்ட திமுக நிதியுதவி
X

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே செல்லப்பாண்டியன் நிதி உதவிகளை வழங்கினார்

உயிரிழந்த 2 இளைஞர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் நிவாரண உதவிகளை கே.கே. செல்லபாண்டியன் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, கோட்டைக்காடு கிராமத்தில் உள்ள நீர்பள்ளம் குளத்திற்கு அசோக், கண்ணன் ஆகியோர் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். வாரிசுகளை இழந்து வாடும் குடும்பத்தினரை இன்று திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ 50, ஆயிரம் நிவாரண நிதியை வழங்கினார்.மேலும், உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!