திமுக துணை பொதுச்செயலாளர் ராசாவுக்கு புதுக்கோட்டை நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு

திமுக  துணை பொதுச்செயலாளர் ராசாவுக்கு புதுக்கோட்டை நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு
X

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்

கந்தர்வகோட்டைக்கு வந்த அவருக்கு, மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் வரவேற்பளித்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தந்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசாவுக்கு, திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா, திருச்சியிலிருந்து கார் மூலமாக கந்தர்வகோட்டை வந்தடைந்தார். கந்தர்வகோட்டைக்கு வந்த அவருக்கு, மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வில், ஒன்றிய செயலாளர் பரமசிவம் மற்றும் கவுன்சிலர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி தொண்டர்கள் பட்டாசுள் வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்