ஈ.ஐ.டி. பாரி ஆலை விவசாயிகளுக்குத் தரவேண்டிய ரூ.64 கோடி பாக்கியை விரைந்து வழங்க கோரிக்கை
புதுக்கோட்டை ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்குத் தரவேண்டிய ரூ.64 கோடி அளவிலான நிலுவைத் தொகையினை விரைந்து வழங்க வேண்டுமென கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சின்னத்துரை வலியுறுத்தினார்.
புதுக்கோட்டை ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்குத் தரவேண்டிய ரூ.64 கோடி அளவிலான நிலுவைத் தொகையினை விரைந்து வழங்க வேண்டுமென கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சின்னத்துரை வலியுறுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவை சந்தித்து எம்.எல்.ஏ., சின்னதுரை அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் குறும்பூரில் செயல்பட்டு வந்த ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை கடந்த 2019-ம் ஆண்டு கரும்பு அரவையை நிறுத்திவிட்டது. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டுமுதல் ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு ரூபாய் 64 கோடி அளவிலான நிலுவைத்தொகையை இதுநாள்வரை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இத்தொகையை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கரும்பு பகுதிகளை அருகிலுள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைப் பகுதிக்கு மாற்றித்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணல் மாட்டுவண்டி குவாரி அமைக்க வலியுறுத்தல்:
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளாறு, அக்னி ஆறுகளின் ஓரங்களில் மணல் அள்ளி மாட்டுவண்டித் தொழிலார்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடந்த 2006 முதல் கறம்பக்குடி அருகே அக்னி ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கு கடந்த சில ஆண்டுகளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாண்டுவண்டியில் மணல் அள்ளிப் பிழைப்பு நடத்துபவர்கள் மிகவும் எளிய குடும்பத்தினர் என்பதையும், இவர்கள் அள்ளும் மணல் உள்ளுர் கட்டுமானப் பணிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கணக்கில் கொண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆற்றுப் படுகைகளில் மாட்டுவண்டி மணல்குவாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீரனூரில் குடிநீர் தட்டுப்பாடு:
கந்தர்வக்கோட்டை தொகுதி கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர்தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. இங்கு 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தனியாரிடம் அதிக விலைகொடுத்து குடிநீரைப்பெற வேண்டிய கட்டாயத்துக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, கீரனூர் பகுதிக்கு குறைந்தது இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது குடிநீர் கிடைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும்.
இவ்வாறு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சின்னத்துரை மாவட்ட கலெக்டரை சந்தித்து அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu