புதுக்கோட்டையில் நடமாடும் காய்கறி வாகனத்தில் விலையை ஆய்வு செய்த டிஆர்ஓ

புதுக்கோட்டையில் நடமாடும் காய்கறி வாகனத்தில்  விலையை ஆய்வு செய்த டிஆர்ஓ
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடமாடும் காய்கறி வாகனங்களில் விற்கப்படும் காய்கறி விலைக்குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டையில் அரசு சார்பில் நடமாடும் காய்கறி வாகனத்தில் விற்கப்படும் காய்கறி விலையை மாவட்ட வருவாய் அலுவலர்ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வீடுதோறும் சென்று காய்கறி வண்டிகள் மூலம் விற்பனை செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு வெளியிட்ட விற்பனை பட்டியல் கொண்டு காய்கறி வியாபாரம் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதன்படி,குளத்தூர் தாலுகா,நார்த்தா மலை சரகம், வெள்ளனூர் வட்டம் முத்தடையான்பட்டி கிராமத்தில், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காய்கறி வண்டிகள் செயல்படும் விதத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

உடன் அன்னாவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர், நார்த்தாமலை சரக வருவாய் ஆய்வாளர்,வெள்ளனூர் மற்றும் சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
திருச்செங்கோட்டில் திருநீலகண்டா் குரு பூஜை..!