அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ சின்னதுரை

அரசின் நேரடி நெல் கொள்முதல்  நிலையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ சின்னதுரை
X

புதுக்கோட்டை மாவட்டம் அண்டகுளத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ சின்னதுரை திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அண்டகுளம் பகுதியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ சின்னதுரை தொடங்கிவைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூர் தாலுகா,அண்டகுளம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி தொடங்கி அறுவடைக்கு தயாராகி வருகின்றன.

இப்பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை என்று பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர்.

அக்கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அப்பகுதியில் திறப்பதற்கு ஏற்பாடு செய்தது. இதனைத்தொடர்ந்து,இன்று கந்தகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லபாண்டியன் இணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர். உடன் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!