புதுக்கோட்டை அருகே அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு, பணிகள் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரி பட்டியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அரசு அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட அனுமதி அளித்து நேற்று பணிகளை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, வடசேரி பட்டி கிராமத்தில் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து இன்று கட்டிடப் பணிகளை தூங்குவதற்காக ஜேசிபி இயந்திரம். டிப்பர் லாரிகள் அங்கு கொண்டு வரப்பட்டது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடசேரிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான ஒரு சூழல் உருவானது.இதனை அடுத்து ஆர்டிஓ பாலதண்டாயுதபாணி பேச்சுவார்த்தை நடதத சம்பவ இடத்திற்கு வந்தார். பேச்சு வார்த்தையை பொதுமக்கள் ஏற்கவில்லை. பேச்சு வார்த்தைக்கு ஒத்துவராததால் ஆர்,டி.ஓ அனைவரையும் கைது செய்யுங்கள், பணிகளை தொடங்குங்கள் என உத்தரவிட்டதாக கூறப்படுறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சினிமாவை மிஞ்சும் வகையில் வாகனங்களை துரத்தி செல்வதும், கல்லை எடுத்து வானத்தின் மீது வீசுவதுமாக இருந்தனர். அப்பகுதி போரக் களம் போல் மாறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிட பணி பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டும், கிராமமக்கள் போராட்டத்தை அவர்களால் நிறுத்த முடியவில்லை.

சர்ச்சைக்குறிய இடத்தில் பணிகள் துவங்கியதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், திருச்சி புதுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது.

அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட தோண்டப்பட்ட குழிகளில் இறங்கியும், கட்டிடப் பணிக்காக கொண்டு வரப்பட்ட வாகனங்கள் மீது பொதுமக்கள் ஏறி நின்றும் பணிகளை தடுத்தனர்.

500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு பாசன வசதி பெறும் கண்மாய், குளங்களை மறித்து இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்ட படுவதாகவும், வடசேரிப்பட்டி கிராமத்திற்கு பொது இடமாக உள்ள இந்த நிலத்தில் எதிர்காலத்தில் பள்ளிக்கூடம், மருத்துவமனை விளையாட்டு மைதானம், தபால் நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் திட்டமிட்டு ஊர்மக்களால் ஒதுக்கப்பட்டுள்ள இடம்.

இந்த இடத்தில்தான் தமிழக அரசு திடீரென குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி கொடுத்துள்ளது. அதை எதிர்த்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என கிராமமக்கள் தெரிவிததனர்.

Tags

Next Story