பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி போராட்டம்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை  கண்டித்து ஒப்பாரி போராட்டம்
X

கறம்பக்குடியில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

கறம்பக்குடியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் பெட்ரோல், டீசல் ,கேஸ் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ரம்யா, ஒன்றிய துணைத் தலைவர் விமலாராணி முன்னிலையில் இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டரை சுற்றி வந்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் பெட்ரோல் ,டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும் முதியோர்களின் ஓய்வூதியத்தை திரும்ப வழங்க வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!