சாராய ஊறல்களை அழித்து வரும் காவல்துறையினர்

சாராய ஊறல்களை அழித்து வரும் காவல்துறையினர்
X
புதுக்கோட்டை அருகே 100 லிட்டர் சாராய ஊறல்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்.

கொரோன முழு ஊரடங்கு காரணமாக அரசு மதுபானக்கடைகள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக அரசு மதுபான கடைகள் திறக்கப்படாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமூக விரோதிகள் கள்ளச் சாராயம் மற்றும் சாராய ஊறல்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் தடுத்து அவர்களிடமிருந்து கள்ளச்சாராயம் மட்டும் ஊறல்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சன்னையப்பட்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் படி திருக்கோகர்ணம் காவல்துறையினர் சோதனை செய்த பொழுது காட்டு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 லிட்டர் சாராய ஊறல்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதே பகுதியில் கொட்டி அழித்தனர். சாராய ஊறல்களை பதுக்கி வைத்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி