புதுக்கோட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டையில்  தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் பறிமுதல்
X

புதுக்கோட்டையில் பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை கைப்பற்றிய காவல்துறையினர்

வாடகை வீட்டில் மேலும் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ ஹான்ஸ் மற்றும் கூல் லிப் பாக்கெட்டுகளை போலீசாரால் கைப்பற்றப்பட்டது

புதுக்கோட்டையில் பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்களை காவல்துறையினர். கைப்பற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி திருவோணம் சாலையில் ஆசாத் ஜெனரல் ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் ஆசாத். இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக மாவட்ட கண்காணிப்பாளரால் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், அந்தக் கடையில் சோதனை மேற்கொண்டபோது, கல்லா கோட்டையை சேர்ந்த முகமது இக்பால் என்பவர் விற்பனைக்காக ஆசாத்திடமிருந்து ஒரு மூட்டை ஹான்ஸ் பாக்கெட்டுகள் வாங்கி செல்லும்பொழுது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசாத் வாடகை வீட்டில் மேலும் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ ஹான்ஸ் மற்றும் கூல் லிப் பாக்கெட்டுகள் தனிப்படை போலீசாரால் கைப்பற்றப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாத், முகமதுஇக்பால் இருவரையும் கைது செய்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!