பகுதி நேர நியாய விலை கடை: அமைச்சர் ரகுபதி திறப்பு

பகுதி நேர நியாய விலை கடை: அமைச்சர் ரகுபதி திறப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மங்கூரணிப்பட்டியில் பகுதி நேர நியாயவிலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்து பொருட்களை வழங்கினார்

சுந்தம்பட்டி அங்காடியிலிருந்து 195 குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டுள்ள இந்த பகுதி நேர நியாய விலைக்கடை திறக்கப்பட்டது

கந்தர்வகோட்டை அருகே மருங்கூரணியில் பகுதி நேர நியாய விலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள சுந்தம்பட்டி அங்காடியிலிருந்து 195 குடும்ப அட்டைகளுடன் பிரிக்கப்பட்டுள்ள மருங்கூரணி பகுதி நேர நியாய விலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story