கந்தர்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

கந்தர்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்ல பண்டியன்

தினந்தோறும் கொள்முதல் அளவை அதிகரிக்க கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென கோரியிருந்தனர்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மாவட்ட பொறுப்பாளர் கே.கே. செல்லப்பண்டியன் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்வீரக்குடியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.தற்போதைய பருவத்திற்கான கொள்முதல் பணிகளை அரசு தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் கொள்முதல் அளவை அதிகரிக்க கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென கோரியிருந்தனர்..

இக்கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் பகுதியில் திறக்கப்பட்டது. இக் கொள்முதல் நிலையத்தை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.கே. செல்லபாண்டியன் திறந்து வைத்தார்.

நிகழ்வில், குன்றாண்டார்கோவில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சேட்டு, குன்றாண்டார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர்கோ.ஆர்.என்..போஸ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!