கறம்பக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது

கறம்பக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது
X

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேசன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு ரகசிய தகவல் வந்தது

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள ஒரு அரிசி குடோன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் கறம்பக்குடியில் சேக் அப்துல்லா என்பவருக்கு சொந்தமான குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த குடோனில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து எடை போட்டுப் பார்த்தபோது 3 டன் எனத்தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்ததோடு ஷேக் அப்துல்லாவை குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஷேக் அப்துல்லாவை கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!