நார்த்தமலை அருகே முதியவர் சடலம்; போலீசார் விசாரணை.

நார்த்தமலை அருகே  முதியவர் சடலம்; போலீசார் விசாரணை.
X

முதியவர் சடலம்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலை அருகே முதியவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகில் அம்மாசத்திரம் கிராமத்திற்கு உட்பட்ட நெடும்பாறை செல்லும் வழியில் இன்று 50 வயதுள்ள ஒரு முதியவர் உடல் இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.

'இறந்த நபர் திருமயம் தாலுகா, மேலதேமுத்துபட்டியை சேர்ந்த முத்தடைக்கன் மகன் கணேசன் என்பது விசாரணையில் தெரியவந்தது‌. கீரனூர் போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறப்பிற்கான காரணம் குறித்து கீரனூர் டிஎஸ்பி சிவசுப்ரமணியன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!