கந்தர்வக்கோட்டையில் நேரடி கொள்முதல் நிலையங்களை எம்எல்ஏ திறந்து வைத்தார்

கந்தர்வக்கோட்டையில் நேரடி கொள்முதல் நிலையங்களை எம்எல்ஏ திறந்து வைத்தார்
X
கந்தவர்கோட்டை தொகுதியில் நேரடி நெல்கொள்முதல் மையங்கள் எம்எல்ஏ சின்னத்துரை தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட 8 இடங்களில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஏற்பாட்டில் நேரடி நெல்கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.

கந்தர்வகோட்டை தொகுதிக்குபட்பட்ட கறம்பக்குடி, பந்துவக்கோட்டை, தட்டாமனைப்பட்டி, பாப்பாபட்டி, கல்லுமடை, செங்கமேடு, வடக்க;ர், குளத்துநாயக்கர்பட்டு ஆகிய இடங்களில் நெல்கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சிகளில் கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், தழிழய்யா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், ரெத்தினவேல், திமுக நகரச் செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!