கோவிட் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

கோவிட் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த  சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
X
கோவிட் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசிமருத்துவ முகாமினை தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்உமாமகேஸ்வரி, செல்லப்பண்டியன்கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துறை ஆகியோர்உடனிருந்தனர்.

பின்னர் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முகாமை துவக்கி வைத்து பேசினார் அப்போதுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும்வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றை தடுக்கும் வகையில் அரசின்பல்வேறு துறைகளை ஒருங்கினைத்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் கறம்பக்குடி அரசு மருத்துவமனை மற்றும் மழையூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம் துவக்கி வைத்து பார்வையிடப்பட்டது.

கோவிட் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்தப்பட்டது. மேலும் மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை, சிகிச்சைகள்,மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்தும்கேட்டறியப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில்தேவையான படுக்கை வசதிகள், கோவிட் கவனிப்பு மையங்கள் போன்றவைஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவிட் சிகிச்சைக்கு தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவர்கள்,செவிலியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோவிட் நோயாளிகளைஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் அதிக அளவிலான மருத்துவமுகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.மேலும் பொதுமக்களை கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்க கோவிட் தடுப்பூசிபோடப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தவறாமல் கோவிட் தடுப்பூசியைசெலுத்திக்கொள்ள வேண்டும்.

கோவிட் தடுப்பூசி பாதுகாப்பானது. அரசு கோவிட் தொற்றைகட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் அனைவரும்முககவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கோவிட்தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். என்று பேசினார் இந்த நிகழ்வில்மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த்மோகன், பொது சுகாதார துணை இயக்குநர் விஜயக்குமார் உள்ளிட்டதொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare