மாரத்தான் போட்டி:வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பரிசு

மாரத்தான் போட்டி:வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பரிசு
X

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 110 நாட்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், வடக்கு மாவட்ட திமுக சார்பில் மராத்தான் போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது.

இதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம், அம்மாசத்திரத்தில் நடைபெற்ற விழாவில், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கி மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 110 நாட்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்திய அளவில் சிறந்த முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார் என எதிர்க்கட்சியினர் கூட தமிழக முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், என்னென்ன பொதுமக்களுக்கு தேவைகள் என்பது குறித்து தினம்தோறும் அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் வெளியிட்டு வருகிறார்.

சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரங்களை மேற்கொண்டேன். தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். எனவே, சிறப்பாக தேர்தலில் பணியாற்றிய மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் விழா முடிந்து திமுக இளைஞரணி செயலாளர் உதய ஸ்டாலின் திரும்பும் போது, அங்கு கூடியிருந்த மாணவ, மாணவிகள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள் ரகுபதி , மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், மாநிலங்களவை உறுப்பினர் எம். எம்.அப்த்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் பங்கேற்றனர்.



Tags

Next Story
ai marketing future