கீரனூர் அருகே இரண்டு லாரிகள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்து

கீரனூர்  அருகே இரண்டு லாரிகள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்து
X

கீரனூர் அருகே நடந்த விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் லாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலையில் இரண்டு லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கடலூர் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் சவுக்குகட்டை லோடை ஏற்றிக்கொண்டு திண்டிவனத்திலிருந்து தேவகோட்டைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அம்மாசத்திரம், மகாலட்சுமி கோவில் ஊரணி அருகில் வரும் பொழுது, பிரபாகரன் என்பவர் செங்கல் லோடு லாரியை கரூரிலிருந்து அறந்தாங்கிக்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

இரண்டு லாரிகளில் ஒன்று பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த பொழுது இரண்டு லாரிகளில் திடீரென மோதிக் கொண்டு விபத்திற்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இவ்விபத்து குறித்து கீரனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!