கறம்பக்குடியில் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில் அழிப்பு

கறம்பக்குடியில் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில் அழிப்பு

கறம்பக்குடியில் ஊரடங்கு காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல் நிலையம் முன்பே உடைத்து அழித்த காவல்துறை

கறம்பக்குடியில் ஊரடங்கு காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல் நிலையம் முன்பே உடைத்து அழித்த காவல்துறை

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு கடந்த மாதம் முழு ஊரடங்கு அறிவித்தது. அதன்படி அரசு மதுபான கடைகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக திறக்கப்படாத காரணத்தினால் கள்ளத்தனமாக மதுபானங்களை கடத்தி விற்பனை செய்து வந்தனர். இதனை தடுக்கும் விதத்தில் காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கறம்பக்குடியில் கடத்தி வரப்பட்ட 321 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் கைப்பற்றப்பட்ட கைப்பற்றப்பட்ட 321 மதுபாட்டில்களை காவல் நிலையம் முன்பு பள்ளம் தோண்டி அதில் மதுபாட்டில்களை உடைத்து காவலர்கள் அழித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story