கறம்பக்குடி: ஆபத்தானநிலையிலுள்ள தண்ணீர்தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கறம்பக்குடி: ஆபத்தானநிலையிலுள்ள தண்ணீர்தொட்டியை சீரமைக்க  பொதுமக்கள் கோரிக்கை
X

கறம்பக்குடி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டி

இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த் தேக்கத் தொட்டியால் பெரும் விபத்து ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த சூரக்காடு 1வது வார்டு பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட 30000 கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி எந்த ஒரு பராமரிப்பும் இன்றி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

தினசரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தினசரி நீர் ஏற்றி அப்பகுதியில் வாழும் 300 குடும்பங்களுக்கு நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மேலேறிச் சென்று சுத்தம் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறது .

இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீரை குடிப்பதால், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மற்றும் நீர்த்தேக்க தொட்டி அருகே அங்கன்வாடி மற்றும் குடியிருப்பு இருக்கும் காரணத்தால் எந்த நேரத்திலும் இடிந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் .

எனவே, கிராமத்தைச் சுற்றி சிறு குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் சில நேரங்களில் தண்ணீர் பிடிப்பதற்காக இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு வருவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, உடனடியாக இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியை சரிசெய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!