தர்ணாவில் ஈடுபட்டவருக்கு உதவி செய்த கந்தர்வகோட்டை மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின்

தர்ணாவில் ஈடுபட்டவருக்கு உதவி செய்த கந்தர்வகோட்டை மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின்
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட வருக்கு உதவி செய்த.   கந்தர்வகோட்டை திமுக மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின்

தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முனிராஜ்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட வரை சமாதானம் செய்து அதிகாரிகளிடம் அழைத்துச்சென்று உதவிய கந்தர்வகோட்டை திமுக மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலினுகக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லுக்குழி வாழ் மக்களுக்காக கந்தர்வகோட்டை அருகே கோவிலூர் கிராமம் நத்தம் என கிராம கணக்கில் தாக்கலாகி உள்ள இடத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு அந்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

மேற்கண்டவாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் மையப்பகுதியை தனிநபர் சுப்பிரமணியன் என்பவருக்கு பட்டா வழங்கி அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து இடத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனை தடுக்க வேண்டும் ஆக்கிரமிப்பு செய்த இடத்தினை தனி நபரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் எனக்கூறி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே அந்தப் பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவர் தனி நபருக்கு பட்டா வழங்கியுள்ளதை கண்டித்தும் அந்த இடத்தினை ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் கொளுத்தும் வெயிலில் ஈடுபட்டார் .

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வருகை தந்த கந்தர்வகோட்டை மாவட்ட திமுக கவுன்சிலர் ஸ்டாலின் தர்ணாவில் ஈடுபட்ட முனிராஜ் என்பவரிடம் பேச்சு நடத்தி அதிகாரியிடம் அழைத்துச் சென்று அவருடைய கோரிக்கை சரியானது எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முனிராஜ் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார். தனிநபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு இருந்த முனிராஜ்யிடம் அதிகாரிகள் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாமல் பிடிவாதமாக இருந்த முனிராஜ், மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டதால் மாவட்ட கவுன்சிலருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!