கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி : எம்எல்ஏ ஆய்வு

கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி : எம்எல்ஏ ஆய்வு
X

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்றுவந்த சீரமைக்கும் பணியை எம்எல்ஏ சின்னதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை சீர் அமைக்கும் பணியை எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் சேரும் சகதியுமாக மாரி பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வந்தது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று கந்தகோட்டை எம்எல்ஏ சின்னதுரையிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதையடுத்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை நடவடிக்கை எடுத்து பள்ளமாக கிடந்த கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த சீரமைக்கும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் முடியும் வரை களத்தில் நின்றார்.

இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர கார்த்திக் மழவராயன் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!