கந்தர்வகோட்டை பகுதியில் விளைந்த நிலத்திலேயே வீணாகி வரும் பூசணிக்காய்கள்

கந்தர்வகோட்டை பகுதியில் விளைந்த நிலத்திலேயே வீணாகி வரும் பூசணிக்காய்கள்
X

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதியில் விளை நிலத்திலேயே  பூசணிக்காய் வீணாகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் விளைந்த நிலைத்திலேயே பூசணிக்காய்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

கந்தர்வகோட்டை அடுத்த தச்சன்குறிச்சி பகுதியில் ஒரு சில விவசாயிகள் பூசணி விவசாயம் செய்து வருகின்றனர் கடந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைத்ததாகவும் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பூசணி விவசாயிகள் எதிர்பார்த்த அளவு விளைச்சல் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கூறினர்

மேலும் இங்கு விளைந்த பூசணிக்காய்கள் அனைத்தும் திருச்சி மதுரை தஞ்சை கோயமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறிய மழையாலும் கடந்த வாரம் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்து இருந்ததாலும் பூசணிக்காய் ஏற்றுமதி இல்லாமல் விளையும் பூசணி காய் இடைத்தரகர்கள் ஒரு கிலோ ஒரு ரூபாய் என்ற மிகக் குறைந்த விலைக்கே எடுத்துச் செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

வியாபாரிகள் வராத காரணத்தினால் தற்பொழுது விளைந்த நிலத்திலேயே பூசணிக்காய்கள் அனைத்தும் அழுகி வீணாகி வருவதாக வும் மேலும் பூசணி விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கையை வைக்கின்றனர்

Tags

Next Story