கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 2000 ரூபாய் நிவாரண தொகை வழங்கிய எம்எல்ஏ

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில்  2000 ரூபாய் நிவாரண தொகை வழங்கிய எம்எல்ஏ
X

கந்தர்வகோட்டை பெரம்பூர் ஊராட்சியில் ரேஷன் கடையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி, மளிகை தொகுப்பை எம்எல்ஏ சின்னதுரை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் எம்எல்ஏ சின்னதுரை ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு ரூ 2000ம் பணம், நிவாரண பொருட்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பெரம்பூர் ஊராட்சியில் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண தொகை 2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் திமுக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குன்னாண்டார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் போஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!