பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் அடித்துக்கொலை: உறவினர்கள் 2 பேர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் அடித்துக்கொலை:  உறவினர்கள் 2 பேர் கைது
X
வெங்கடேசன் என்பவர், பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் நின்றிருந்த சுகன்யாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு துவரவயல் கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண் நேற்று முன்தினம் கீரனூர் பேருந்து நிலையத்தில் தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.



அப்போது அந்த பேருந்து நிலையத்தில் சுற்றி திரியும் மதுபோதைக்கு அடிமையான சற்று மனநலம் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் என்பவர், பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த சுகன்யாவிடம், சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகன்யா அவரது சகோதரர் சுப்பிரமணியனிடம் தெரிவித்துள்ளார்.




இதனையடுத்து அங்கு வந்த சுப்பிரமணியன் மற்றும் அவரது நண்பர் யோகராஜ் ஆகியோர் சில்மிஷத்தில் ஈடுபட்ட வெங்கடேசனை தாக்கியுள்ளனர். இதில் கை மற்றும் கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பேருந்து நிலையத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த கீரனூர் போலீசார், சுப்பிரமணியன் மற்றும் யோகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!