புதுக்கோட்டை அருகே பாதியில் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால் காளைகள் உரிமையாளர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா கிள்ளனூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை கந்தவகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை புதுக்கோட்டை மாவட்டம் வாடக்கு மாவட்ட பொருளாளர் கேகே செல்லப்பாண்டியன் மற்றும் ஆர்டிஓ குழந்தை சாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000காளைகள் 500 மாடு பிடிவீரர்களும் களம் கண்டனர். ஜல்லிக்கட்டு பங்கேற்ற காளையை அடக்கும் வீரார்களுக்கு கட்டில் , பீரோ, அண்டா ,டேபிள், சீலிங்பேன். அயன் பாக்ஸ், தங்க நாணயம், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பரிசுகளை ஜல்லிக்கட்டு விழா குழுவினர் வழங்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வாருவாய் துறை அதிகாரிகள்50 மேற்பட்டேர் பங்கேற்றனர்.மேலும் 100 மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.தீ யனைப்பு தூறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் சிறந்த மாடுபிடி வீராக்கு மோட்டார் பைக் விழா குழுவினர் சார்பில் வழங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பதற்காக அப்பகுதியில் சுற்றுவட்டாரத்தில் விழுந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில், மதியம் 2மணி வரை 348 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன மேலும் 2.மணி அளவில் போதிய அளவு நேரம் இல்லாத காரணத்தினால் ஜல்லிக்கட்டு போட்டியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அரசு அதிகாரிகள் விழா குழுவினருக்கு உத்தரவிட்டனர். உத்தரவின் பேரில் விழாக் குழுவினர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை முடிப்பதற்கு முடிவு செய்தனர்.இதனால் ஆத்திரமடைந்த காளை உரிமையாளர்கள் பேரிகாடுகளை உடைத்து காளைகளை உள்ளே அவிழ்த்து விட்டனர். காவல்துறையினர் பேரிகார்டு உடைத்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
மேலும் காளைகளை ஆங்காங்கே அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டோக்கன் வழங்கப்பட்ட காளைகள் அனைத்திற்கும் விழாக் குழுவினர்கள் டோக்கனை பெற்றுக்கொண்டு பரிசுப் பொருட்களை வழங்கி உள்ளனர்.மேலும் இந்த பகுதியில் மிகவும் பரபரப்பாகவே காணப்பட்டது மேலும் காளைகளை ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்துடன் ஜல்லிக்கட்டை பார்த்து வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது ஜல்லிக்கட்டு போட்டி முடிவு பெற்றது என்று ஆர்டிஓ குழந்தைசாமி கூறியுள்ளார்.மேலும் அதிகாரிகளின் உத்தரவை ஏற்று கிராம பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை முடிப்பதற்கு முடிவு செய்தனர். ஆனால் வாடிவாசலில் முன்பு கொண்டுவந்து காளைகளை காலை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு வந்தனர் மேலும் அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறும் செயல் பட்டதால் மிகவும் அச்சத்துடன் ஜல்லிக்கட்டை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu