கீரனூர் அருகில் பெரியகுளம் பகுதியில் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டவர் கைது

கீரனூர் அருகில் பெரியகுளம் பகுதியில் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டவர் கைது
X
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு லாரியும் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருகில் பெரியகுளம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தலில் சிலர் ஈடுபடுவதாக கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இத் தகவலை அடுத்து கீரனூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்பகுதியாக வந்த டிப்பர் லாரியை சோதனையிட்டதில், அதில் 1 யூனிட் கிராவல் மண் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து டிப்பர் லாரியின் டிரைவர் குளத்தூர் தாலுகா உடையமழவராயன்பட்டி பகுதியை சேர்ந்த சோலைமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 1 யூனிட் கிராவல் மணலுடன் டிப்பர் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!