விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகள்: புதுக்கோட்டையில் கலந்தாய்வுக் கூட்டம்
கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகள் குறித்தும், அடையாள அட்டை அணிதல் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அடையாள அட்டை அணிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் வட்டாட்சியர் விஸ்வநாதன் பேசுகையில், தற்போதுள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும், நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி இல்லாத நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாக்களை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கொண்டாடுமாறும் தடைகளை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலைகள் வைப்பது அவைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது தெரியவந்தால் சட்டரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்களிடம் அரசு அறிவித்ததை போல் அரசு துறையில் பணிபுரியும் அனைவரும் அடையாள அட்டை அணி வேண்டும் என்றதோடு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் துணை வட்டாட்சியர் ராமசாமி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu