கந்தர்வக்கோட்டை அருகே அடுத்தடுத்து தீ விபத்து : போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்

கந்தர்வக்கோட்டை அருகே அடுத்தடுத்து தீ விபத்து :  போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்
X

கந்தர்வகோட்டை,கரும்புத்தோட்டத்தில் ஏற்பட்ட தீயை  அணைக்கும் தீ அணைப்பு வீரர்கள்.

புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை தாலுக்காவில், நடுப்பட்டியில் உள்ள கோவிந்தராஜன் என்பவருக்கு சொந்தமான வாழை மற்றும் கரும்பு தோட்டம் உள்ளது. அவரது கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் கரும்பு தோட்டம் அனைத்தும் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்த கந்தர்வக்கோட்டை தீயணைப்பு வீரர்கள்பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் நடந்து ஒரு மணிநேரத்திற்குள் கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கிராமத்தில் கருப்பு கோவில் அருகே வைத்தியலிங்கம், என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோட்டத்தில் மின்கம்பி உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் பல ஏக்கர் சவுக்கு மரங்கள் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து விரைந்து சென்ற கந்தர்வக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். கந்தர்வக்கோட்டை பகுதியில் அடுத்தடுத்து இரு இடங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!