/* */

கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.சின்னத்துரைக்கு விவசாயிகள் நல சங்கம் பாராட்டு

கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.சின்னத்துரைக்கு விவசாயிகள் நல சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.சின்னத்துரைக்கு விவசாயிகள் நல சங்கம் பாராட்டு
X

கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரைக்கு விவசாயிகள் நல சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நூறாண்டு கனவு திட்டமான காவிரி -வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்டகால பெருமூச்சு திட்டமாகவே இது இருந்துவருகிறது.

காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் விவசாய சங்கங்களும் பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் முதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

முந்தைய தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளது கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கடைசியாக அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

சட்டமன்ற பட்ஜெட் நிதிநிலை அறிக்கையிலும் வைகை காவிரி- வைகை- குண்டாறு- இணைப்பு திட்டம் இடம்பெறவில்லை அறிக்கையின் மீதான விவாதத்தில் ஈடுபட்ட கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை பேசும்போது இந்த நிதிநிலை அறிக்கையில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தில் அறிவிப்புகள் ஏதும் இல்லை/ 7 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சார்ந்து உள்ளதால்இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில் நிதிநிலை விவாதத்திற்கு.பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பி/டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சின்னத்துரையின் கோரிக்கையை ஏற்று காவிரி- வைகை -குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அரசு ரூ. 281.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆட்சியின் தொடக்கத்திலேயே இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது பாராட்டுக்குரியது/ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் மற்றும் 7 மாவட்ட நிர்வாகிகள் சார்பிலும் விவசாயிகள் சார்பிலும் தமிழக முதலமைச்சருக்கு நிதி அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்து இத்திட்டத்தை விரைந்து செயல்படுவதோடு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா களையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பின்னர் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரைக்கு விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

நிகழ்வில் மாவட்ட தணிக்கை தலைவர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியத் தலைவர் குழந்தை, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், புஷ்பராஜ் ராஜசேகரன், ஒன்றிய தலைவர் செந்தமிழ் செல்வன், சேசு சூசை, சிவானந்தன், உள்பட பலர் கலந்துகொண்டு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 3 April 2022 4:31 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...