நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காததால்  போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
X

கறம்பக்குடி அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென டிராக்டர் உடன் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

ரெகுநாதபுரத்தில் நேரடிக் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் கோடை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகளின் பயனுக்காக கடந்த மே மாதம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்களை விற்பனை செய்வதற்காக அந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து குவித்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக அங்கு நெல் கொள்முதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் 25,000 இற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழை பெய்தால் பாதிப்படையும் சூழலுக்கு உள்ளதால், ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் இன்று ரெகுநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே கறம்பக்குடி தஞ்சாவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சாலையின் குறுக்கே டிராக்டர்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுடன் போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரெகுநாதபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடியாக விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் இந்த போராட்டத்தால் ரெகுநாதபுரம் தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!