அரசு பள்ளி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

அரசு பள்ளி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  மனு
X

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அரசு பள்ளி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர்.

அரசு பள்ளி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளிக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் வேணுகோபால் செட்டியார் என்பவர் 10 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.

இந்த இடத்தை பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் புனிதவதி, சாந்தி, மதியழகன், தமிழழகன் மற்றும் ராதா சசிகுமார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து போலி ஆவணம் தயார் செய்து, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தை அபகரித்து வந்ததாக தெரிய வருகிறது.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்