கந்தர்வகோட்டையில் ரோடு வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்த கொத்தம்பட்டி பகுதியில் 8 வருடத்திற்கு மேலாக சாலை வசதி செய்து தரப்படவில்லை. இப்போது இருக்கும் சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. அந்த வழியாக நீண்ட வருடமாக தொடர்ந்து லாரி மூலமாக மணல் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
தொடர்ந்து அதிக அளவில் குவாரிக்கு லாரி வந்து செல்வதால் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. அதனால் சில நாட்களாக தஞ்சாவூரில் இருந்து வரும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் இன்று காலை அவ்வழியாக வந்த லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் அவ்வழியாக பயணம் செய்வது மிகுந்த சவாலாக இருந்து வருகிறது. இந்த சாலை வழியாகத்தான் பொது மக்கள், மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் பயணிக்க வேண்டும். கோவில் மற்றும் அரசு மருத்துவமனை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவைகளுக்கு செல்வதற்கு முறையான தார் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் வழக்கம் போல் எங்கள் ஊருக்கு அரசு பேருந்துகள் வர வேண்டுமென்றும் என்பதை வலியுறுத்தி இன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக தார்சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu