புதுக்கோட்டையில் 2 முதியோர் இல்லங்களை மூட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டையில்  2 முதியோர் இல்லங்களை மூட  உத்தரவிட்ட மாவட்ட  ஆட்சியர்
X

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், அழியாநிலை கிராமத்தில் நமது இல்லம்அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தை ஆய்வு செய்த ஆட்சியர் கவிதா ராமு. 

அரசின் அனுமதி பெறாமல் முதியோர் இல்லம் நடத்தி வந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்

புதுக்கோட்டையில் இரண்டு முதியோர் முதியோர் இல்லத்திற்கு சில் வைத்து நடவடிக்கை எடுத்த ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், அழியாநிலை கிராமத்தில் நமது இல்லம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் முதியோர் இல்லம் மற்றும் ஒத்தக்கடையில் செயல்படும் புதிய நமது இல்லத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

மேலும், வடுகப்பட்டியில் உள்ள வள்ளலார் காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றியமாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான இல்லத்தினை ஆய்வு செய்து, அங்குதங்கியிருந்த 24 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என்பதையும், அடிப்படை வசதிகளான குடிநீர், தங்குமிடம், கழிப்பிடம் ஆகிய வசதிகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி, வருகைப் பதிவேடு ஆகியவற்றையும் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பின்னர், கந்தர்வக்கோட்டை வட்டம், அரியானிப்பட்டியில் செயல்படுகிற ரெனிவல் பவுண்டேஷன் என்ற மனநலப் பராமரிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அங்கு தங்கியிருந்தவர்களிடம் வழங்கப்படும் உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் சொந்த விருப்பத்தின் பேரில் வந்தீர்களா என்ற விபரத்தையும் நேரில் கேட்டறிந்து ஆய்வு செய்தார்கள்.

மேலும்முதியோர் இல்லத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுவது தெரியவந்ததை அடுத்து நமது இல்லத்தில் இருந்த 37 ஆண்கள் 31 பெண்கள் உள்ளிட்ட 68 பேரையும் அதேபோல் ஒத்தக்கடை கிராமத்தில் உள்ள புதிய நமது இல்லத்தில் இருந்த 50 ஆண்கள் 8 பெண்கள் என மொத்தம் 59 நபர்கள் உள்ளிட்ட மொத்தம் 127பேரையும் மீட்டு புதுக்கோட்டை பழைய அரசு தலைமை முத்துலட்சுமி ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள அரியாணி பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த ரெனிவல் பவுண்டேஷன் மனநல காப்பக பராமரிப்பு மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் உரிய அரசு அனுமதி இல்லாமலும் செயல்பட்டு வந்த காப்பகத்தில் இருந்த 70 ஆண்கள் 27 பெண்கள் உள்ளிட்ட 106 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பழைய அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த இரண்டு முதியோர் இல்லங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும், அரசின் அனுமதி பெறாமல் முதியோர் இல்லம் நடத்தி வந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர்கள் சொர்ணராஜ், அபிநயா,மாவட்ட மனநல திட்ட அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி, வட்டாட்சியர் புவியரசு மற்றும் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai healthcare products