கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

கர்நாடகா அரசை கண்டித்து கரம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமது ஜான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌. ஆர்ப்பாட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும், இல்லையேல் தங்களது போராட்டம் வலுப்பெறும் என கர்நாடக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது மன்சூர், விவசாய அணி மாநில செயலாளர் பேரை அப்துல் சலாம், மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிஃப்,மாவட்ட துணைச் செயலாளர் முகமது பிலால், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சீனிவாசன், மற்றும் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் விஜயன், விசிக பொறுப்பாளர்கள் சுந்தரபாண்டியன் முருகேசன் மதிமுக நகர செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!