துணை வட்டாட்சியர் காலி பணியிடத்தை நிரப்ப கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்

துணை வட்டாட்சியர் காலி பணியிடத்தை நிரப்ப கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி.

குளத்தூரில் துணை வட்டாட்சியர் காலி பணியிடத்தை நிரப்ப வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் காலி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. வருவாய் ஆய்வாளர், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம பணியாளர்களுடைய பணிகள் மற்றும் வருவாய் வரிவசூல், கடன் வசூல் மற்றும் கிராம கணக்குகளை தணிக்கையிடுதல், ஏ மற்றும் பி மெமோ இனங்களை தணிக்கையிட்டு வெளியேற்று நடவடிக்கைக்கான ஆணைகளைப் பிறப்பித்தல் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருக்கக்கூடிய துணை வட்டாட்சியரின் பணி நிரப்பபடாமல் இப்பணிகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.

இதனால், இப்பணியை உடனடியாக நிரப்ப கோரி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு செயலாளர் சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதியிலேயே ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!