பள்ளி- கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு:அச்சத்தில் பெற்றோர்

பள்ளி- கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு:அச்சத்தில் பெற்றோர்
X

கந்தர்வகோட்டை அரசு பள்ளி படிக்கும் மாணவி ஒருவருக்கு இன்று கொரானா பாதிப்பு ஏற்பட்டது

அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 4 பேருக்கும் திருமயம் பகுதியிலுள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவிக்கும் கொரோனா பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மாணவர்கள் பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்ப டாமல் இருந்த வந்த நிலையில், தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 9 ,10, 11 ,12-ஆம் வகுப்புகள் மற்றும் செயல்படும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்தது.

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிகள் திறந்த இரண்டாவது நாளிலேயே புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளியில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மனைவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, பள்ளியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.


மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தது. இன்று புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12 -ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பள்ளி மாணவி புதுக்கோட்டை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் திருமயம் பகுதியில் தனியார் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவி உள்பட மொத்தம் 5 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!