கீரனூர் அருகே கொரோனாவிற்கு ஒருவர் பலி

கீரனூர் அருகே கொரோனாவிற்கு ஒருவர் பலி
X
கீரனூர் அருகில் வாலியம்பட்டி பகுதியில் கொரோனாவிற்கு ஒருவர் இன்று பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருகில் வாலியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒருவர் நீரிழிவு நோயின் காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். ஏற்கனவே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவரது உடல் சொந்த ஊரான வாலியம்பட்டியில் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி இன்று அடக்கம் செய்யப்பட்டது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!