பள்ளி மாணவர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு; அசத்தும் சமூக ஆர்வலர்

பள்ளி மாணவர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு; அசத்தும் சமூக ஆர்வலர்
X

பள்ளி மாணவர்களை வைத்து கும்மி பாடல் மூலம் பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர்.

களபம் ஊராட்சியில் பள்ளி மாணவர்கள் கும்மியடித்து பாட்டு பாடி பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கரம்பக்குடி ஒன்றியம் களபம் ஊராட்சியில் பள்ளி மாணவர்கள் மூலம் கும்மியடித்து பாடல் பாடிய பொதுமக்களிடையே கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலூகா களபம் ஊராட்சியில் சமூக ஆர்வலர் இளவரசன் கொரணா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் வைத்து பாடல் மற்றும் கும்மி அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இந்த பாடலில் காவல்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags

Next Story
ai and future cities