கந்தர்வகோட்டையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: பொதுமக்கள் பங்கேற்பு

கந்தர்வகோட்டையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி: பொதுமக்கள் பங்கேற்பு
X

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கை கழுவுதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண்கள்.

கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

கொரோனா 3வது அலை தொற்றை வர விடாமல் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பெண் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்தனர். அப்போது சமூக இடைவெளியை பின்பற்றி நடனமாடி, பாட்டு பாடி, உறுதிமொழி எடுத்தும் பொதுமக்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு நுழையும் முன்பு எவ்வாறு கைகளை தேய்த்து கழுவ வேண்டும் என்றும், வெளியும் செல்லும் பொதுமக்கள் கட்டாயமாக தங்களது உயிர்களை பாதுகாக்கும் விதத்தில் முககவசம் அணிய வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கு பாட்டுப்பாடி நடனமாடி பேருந்து நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன் மற்றும் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள், காவல்துறையினர் , ஊராட்சி மன்ற தலைவர், திமுக ஒன்றிய கவுன்சிலர், திமுக நகர செயலாளர் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!