கந்தர்வகோட்டை அரசு மருத்துவனையில் கோவிட் சிகிச்சை மையத்தை சின்னத்துரை எம்எல்ஏ திறந்து வைத்தார்

கந்தர்வகோட்டை அரசு மருத்துவனையில் கோவிட் சிகிச்சை மையத்தை சின்னத்துரை எம்எல்ஏ  திறந்து வைத்தார்
X
எய்டு இந்தியா நிறுவனமும் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையும் இணைந்து நிறுவியுள்ள கோவிட் கவனிப்பு மையத்தை கந்தர்வகோட்டை தொகுதி எம்.எல்.ஏ சின்னத்துரை இன்று திறந்து வைத்தார்.

எய்டு இந்திய நிறுவனமும், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையும் இணைந்து நிறுவப்பட்டுள்ள இந்த கோவிட் கவனிப்பு மையத்திற்குத் தேவையான படுக்கைகள், ஆக்சிஜன் செரிவூட்டி, ஆக்சிஜன் கிளினர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் இந்தக் கோவிட் கவனிப்பு மையத்திற்கு எய்டு இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை பேசியதாவது:

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச வீடுகள் கட்டிக்கொடுத்து வருவது, புயலில் மற்றும் கோவிட் நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருவது என கோடிக்கணக்கான மதிப்பிலான நலத்திட்டங்களை புதுக்கேர்டை மாவட்டத்தில் எய்டு இந்தியா நிறுவனம் செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு இத்தகைய பேருதவியைச் செய்துள்ளது. மேலும், இம்மருத்துவமனைக்குத் தேவையான உதவிகளை செய்ய இருப்பதாகவும், கறம்பக்குடி, கீரனூர் அரசு மருத்துவமனைகளுக்கும் உதவ உள்ளதாகவும் தெரிவித்திருப்பது மிகுந்த பாராட்டுக்குறியது என்று பேசினார் .

இந்த நிகழ்ச்சியில் எய்டு இந்தியா நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மருத்துவத்துறை இணைக் இயக்குனர் ராமு, துணை இயக்குனர் கலைவாணி, கவிஞர் கவிவர்மன் மருத்துவ அலுவலர் ராதிகா, எய்டு இந்திய நிறுவன ஊழியர் ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!