வடுகப்பட்டி அருகே கார்,டூ வீலர் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் பலத்த காயம்

வடுகப்பட்டி அருகே கார்,டூ வீலர் நேருக்கு நேர் மோதல்:  ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் பலத்த காயம்
X

வடுக்கப்பட்டியில் நடந்த விபத்தில் உடைந்து கிடக்கும் கார்.

வடுகப்பட்டி அருகே கார்,டூ வீலர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் பலத்த காயமடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் செங்கிப்பட்டி நெடுஞ்சாலை பகுதியில் வடுகப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் குமார் மற்றும் அவரது மனைவி ரம்யா என்ற பாரதி இருவரும் இன்று சொந்த ஊரான வடுகப்பட்டி பகுதியிலிருந்து கந்தர்வகோட்டைக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது எதிரில் வந்த கார் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியது. இதில் ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இருசக்கர வாகனம் ஓட்டிய குமார் தீவிர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் காரை திருச்சியிலிருந்து ஒட்டி வந்த ஓட்டுனர் மாரிமுத்து( 41) என்பவரை கந்தர்வகோட்டை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இறந்துபோன பாரதியை உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!