கந்தர்வகோட்டை அருகே புளியமரத்தில் மோதி கார் விபத்து; ஒருவர் பலி

கந்தர்வகோட்டை அருகே புளியமரத்தில் மோதி கார் விபத்து; ஒருவர் பலி
X

விபத்துக்குள்ளான கார்.

கந்தர்வகோட்டை அருகே கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சென்னை அடுத்த திருவள்ளூர் பகுதியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு ஐந்து பேர் காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாலை நேரம் என்பதால், வடுகப்பட்டி அருகே செல்லும்போது வாகன ஓட்டுனர் நிலைதடுமாறினார். இதனால் கார் சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதியயது. இதில் சஞ்சய் சிங் வயது 31 என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காரில் பயணம் செய்த ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு பேரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த கந்தர்வகோட்டை போலீசார், விபத்தில் உயிரிழந்த சஞ்சய் சிங்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!