கீரனூர் டிஎஸ்பி தலைமையில் ரத்ததான முகாம்

கீரனூர் டிஎஸ்பி தலைமையில் ரத்ததான முகாம்
X

கீரனூர் அருகே ரத்ததான முகாமை துவக்கி வைத்த டிஎஸ்பி சிவசுப்பிரமணியன்.

கீரனூர் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற ரத்ததான முகாமை கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற ரத்ததான முகாமை கீரனூர் டிஎஸ்பி சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். கீரனூர் லயன்ஸ் சங்கமும், வணிகர் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த ரத்ததான முகாமில் 70 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்.

புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் இரத்தத்தின் இருப்பு குறைவாக உள்ளதை தொடர்ந்து இச்சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. பின்னர் ரத்ததானம் செய்தவர்களுக்கு பழங்களும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தங்கள் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் சேகரிக்கப்பட்டு அவசரத் தேவைக்குப் பயன்படுத்த உள்ளனர்.

இதில் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி ரத்தப் பிரிவு பொறுப்பாளர் அழகம்மை, குன்றாண்டார்கோவில் வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்