/* */

சைக்கிள், விறகு, ராட்டிகளை வங்கி லாக்கரில் வைக்கும் போராட்டத்தால் பரபரப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள், விறகுகள் ஆகியவற்றை வங்கி லாக்கரில் வைப்பதற்காக போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஈடுப்பட்டதால் பரபரப்பு.

HIGHLIGHTS

சைக்கிள், விறகு, ராட்டிகளை வங்கி லாக்கரில் வைக்கும் போராட்டத்தால் பரபரப்பு
X

பேங்க் லாக்கரில் சைக்கிள், விறகுகளை வைக்க முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரை போலீசார் விரட்டி அடித்தனர்.

கந்தர்வக்கோட்டையில் பெட்ரோல் மற்றும் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சைக்கிள், விறகுகள், ராட்டி ஆகியவற்றை வங்கி லாக்கரில் வைப்பதற்காக தண்டோரா போட்டு ஊர்வலமாக வந்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டதிற்கு மாவட்ட தலைவர் நியாஸ் தலைமை வகித்தார். அப்போது விறகுகள், விறகடுப்பு, சைக்கிள் ஆகியவற்றின் விலை உயரக்கூடும். எனவே தற்போது அவற்றை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த பொருட்களை வங்கி லாக்கரில் வைத்து பாதுகாக்கும் வகையிலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கந்தர்வகோட்டையில் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கு மேற்பட்ட அக்கட்சியினர் ஊர்வலமாக சைக்கிள் விறகு அடுப்பு மற்றும் ராட்டி ஆகியவற்றுடன் தண்டோரா அடித்து ஊர்வலமாக வங்கி லாக்கரில் வைக்க வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்து போகுமாறு கூறினார். ஆனால் அவர்கள் சாலையிலேயே சைக்கிள் விறகுகள் ஆகியவற்றை வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 15 July 2021 10:15 AM GMT

Related News