புதுக்கோட்டை :பாரம்பரிய விதை திருவிழா வில் காடுகள் வளர்ப்பு கருத்தரங்கு
ஒடுக்கம்பட்டி கிராமத்தில் பாரம்பரிய விதை திருவிழாவில்,ஈஷா காவிரி கூக்குரல் திட்டத்தின் கீழ் காடுகள் வளர்ப்பு பற்றி விளக்க கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மரங்கள் வளர்ப்பது பற்றி பொதுமக்கள் எடுத்துக் கூறும் மரம் தங்க கண்ணன்
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற பாரம்பரிய விதை திருவிழாவில் காடுகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீரனூர் அருகே ஒடுகம்பட்டி கிராமத்தில் கொழிஞ்சி குடும்பம் ,உழவர் உற்பத்தியாளர் குழுவின் சார்பில் உயிர் சூழல் கிராமம் மற்றும் பாரம்பரிய விதை திருவிழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஈஷா காவிரி கூக்குரல் திட்டத்தின் சார்பாக வேளாண் காடுகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில், விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில், விலை மதிப்புமிக்க, அதிக நிழல் விழாத மரங்களை ,ஒரு ஏக்கருக்கு 80 மரக் கன்றுகள் வரை நடுவதன் மூலம் மண் வளம், நீர் வளம் மேம்படுத்துவதோடு, விவசாயிகள் கணிசமான வருவாயை ஈட்ட முடியும்.
வாழை, பழ மரங்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யக்கூடிய விவசாய நிலங்களில் வரப்புகளில் சுற்றிலும் டிம்பர் மரங்களை நடவு செய்வதால் அவை காற்று தடுப்பானாக செயல்பட்டு தோட்டக்கலை பயிர்களை இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாக்கும் என்பவை குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மரம் தங்க .கண்ணன் கலந்து கொண்டு, மரங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu